சென்னை : புளியந்தோப்பு பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை 1 மணி நேரத்தில் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
கடந்த 25.10.2019 அதிகாலை 02.30 மணியளவில் புளியந்தோப்பு காவல் மாவட்ட காவல் ஆளிநர்கள் இரவு ரோந்து பணியில் இருந்தபோது TN22 R 6669 என்ற பதிவெண் கொண்ட லாரியில் வந்த ஓட்டுநர் பிரகாஷ் (32), என்பவரை 3 நபர்கள் லாரியை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூபாய்.400/- ஐ பறித்துச் சென்றதாக புகார் தெரிவித்தார்.
மேலும் Tata Sumo காரில் வந்த செல்வகுமார், வ/30, புளியந்தோப்பு, சென்னை மற்றும் காரின் ஓட்டுநர் வெங்கடேசன், வ/35 ஆகியோர் அம்பத்தூரிலுள்ள IT நிறுவனத்தில் வேலை முடித்து புளியந்தோப்பு அருகே வரும்போது, 3 நபர்கள் அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 1000/-ஐ பறித்து சென்றதாக 2 பேரும் தெரிவித்தின் பேரில் மேற்படி காவல் ஆளிநர்கள் சென்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தபோது, அங்கிருந்த 3 நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவர்களை காவல் ஆளிநர்கள் துரத்திச் சென்று 2 நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை செய்தபோது, பிடிபட்ட நபர்கள் 1.சூர்யா, (22), 2.விக்னேஷ், (24), என்பதும் தப்பியோடிய நபர் குள்ளா (எ) பிரகாஷ் என்பதும், 3 பேரும் சேர்ந்து மேற்படி 2 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.350/- பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட சூர்யா மற்றும் விக்னேஷ் ஆகியோரை P-1 புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இரவு ரோந்து பணியின்போது, விழிப்புடன் செயல்பட்டு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை சம்பவம் நடந்த 1 மணி நேரத்திலேயே கைது செய்த P-2 ஓட்டேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.P.பிரேம்குமார், P-4 பேசின்பாலம் காவல் நிலைய நுண்ணறிவுப்பிரிவு முதல் நிலைக் காவலர் திரு.D.கண்ணன் (மு.நி.கா.32587), P-2 ஓட்டேரி காவல் நிலைய காவல் நண்பர் குழுவைச் சேர்ந்த (FOP) M.டில்லிபாபு மற்றும் H.மகபூப் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்,திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (26.10.2019) அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.