விழுப்புரம் : சத்தியமங்கலத்தில் ரூ.1 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை சென்னை தலைமை செயலகத்தில இருந்து முதல் அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சத்தியமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் திரு. மோகன், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், துணை போக்குவரத்து ஆணையர் திரு. ரஜினிகாந்த், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திண்டிவனம் சிவக்குமார், விழுப்புரம் வெங்கடேசன், ஒன்றியக்குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், மேல்மலையனூர் கண்மணி நெடுஞ்செழியன், பேரூராட்சி தலைவர்கள் செஞ்சி திரு.மொக்தியார் மஸ்தான், அனந்தபுரம் முருகன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. சுந்தர்ராஜன், தாசில்தார் நெகருன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.