விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஜக்காம் பேட்டை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் உத்தரவின் பேரில் திண்டிவனம் உட்கோட்டம் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு அபிஷேக்குப்தா IPS., அவர்களின் மேற்பார்வையில் ஆய்வாளர் திருமதி லட்சுமி, உதவி ஆய்வாளர் திரு .பரமகீர்த்தி(Trg) மற்றும் காவலர்கள் தலைமையில் ஜாக்கம்பேட்டை அய்யனார் கோயில் அருகே ரோந்து சென்று சோதனை செய்வதில் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதும் போதை ஊட்டக்கூடியதுமான கஞ்சா பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்த குற்றவாளி வினித் – திண்டிவனம். என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.