சென்னை: சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சண்முகபிரியன், வ/33, என்பவர் கடந்த 23.5.2021 அன்று இரவு அவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது குறித்து S16 பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
S16 பெரும்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, சம்பவயிடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, இருசக்கர வாகனத்தை திருடிய குற்றவாளிகள் 1.சுபாஷ், வ/25 பெரும்பாக்கம், 2.சந்தோஷ், வ/27 பெரும்பாக்கம் ஆகிய 2 குற்றவாளிகளை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் சேர்ந்து திருடிய வாகனங்களை பூஞ்சோலை என்பவரிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது
அதன்பேரில், காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டு, எதிரி பூஞ்சோலை, வ/35, ஆவடி என்பவர் காரில் வரும்போது பிடித்து திருடுபோன வாகனத்தைப் பற்றி விசாரணை செய்த போது, காரில் பெருமளவு கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 3 குற்றவாளிகளிடமிருந்து புகார்தாரர் சண்முகபிரியனின் 1 இருசக்கர வாகனம் உட்பட 5 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ, 1 கார் மற்றும் 10 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் குற்ற எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.