திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி 2-வது வார்டு அரியன் வாயல் பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் அப்பகுதி வார்டு கவுன்சிலர் அபூபக்கர் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி ஆகியோர் இருவரிடம் புதிய பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டி கோரிக்கை வைத்தார். வார்டு கவுன்சிலரின் கோரிக்கையை ஏற்று அத்திப்பட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் சமூக வளர்ச்சி நிதி 1 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு அதன் சாவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்தியன் ஆயில் நிறுவன தலைமை செயல் அதிகாரி அசூதோஷ் குப்தா பள்ளி கட்டிட சாவியை பள்ளி தலைமை ஆசிரியை மாலாவிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி மீஞ்சூர் பேரூராட்சித் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணைத்தலைவர் அலெக்சாண்டர், திமுக முன்னாள் மீஞ்சூர் பேரூர் கழகச் செயலாளர் மோகன்ராஜ் நந்தியம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் மற்றும் மீஞ்சூர் வியாபாரி சங்க செயலாளர் டி.ஷேக் அஹமத்மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சர்கள் நக்கீரன், ஜெயலக்ஷ்மி தன்ராஜ், துரைவேல் பாண்டியன்,இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள் நிகழ்ச்சி முடிவில் ஒப்பந்ததாரர் வேளூர் சரவணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு