கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் திரு.விவேகானந்தன் அவர்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திரு..பரமேஸ்வரன் மற்றும் போலீசார் வால்பாறை சாலையில் வஞ்சியாபுரம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் டிரைவரை பிடித்து விசாரணை செய்ததில் ஆனைமலையை சேர்ந்த வீரக்குமார் 24. என்பதும் வாகனத்தில 1500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் குற்றவாளி வீரக்குமாரை கைது செய்து 1500 கிலோ ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்