தருமபுரி: கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மணி இவரது மனைவி முத்தமிழ். இவர்களுக்கு திருமணம் ஆகி 2½ ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ரஞ்சித் (1½) என்ற ஆண் குழந்தை இருந்தது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெற்றோர், குழந்தைக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனை மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று குழந்தை இறந்தது. சோகம்இதனையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
1½ வயது ஆண் குழந்தை இறந்தது தொடர்பாக ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.