திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட 31வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இன்று திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்நிலையம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் நீயூஸ்+ இணைந்து மாபெரும் இலவச சர்க்கரை மற்றும் நுரையீரல் பரிசோதனை முகாம் நகர ஸ்ரீமீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் மற்றும் நகர உதவி கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் சிறப்பித்தனர். இம்மருத்துவ முகாமில் நகர போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்கள் தலைமையிலான காவலர்கள் மற்றும் நகர்பற அனைத்து துறை காவலர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். இம்முகாமில் நகர ஒட்டுநர்கள் சங்கம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் பொது மக்களும் பங்கேற்று பயன் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா