திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு உட்கோட்டம், மோரணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூதேரிபுள்ளவாக்கம் ஏரி நிரம்பி வெளியான வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால்,
தகவலறிந்த செய்யாறு காவல் ஆய்வாளர் திரு.S.பாலு அவர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழு காவலர்கள் விரைந்து சென்று வெள்ளம் வடிவதற்க்கான ஏற்பாடுகளை செய்து,
அங்கு சிக்கியிருந்த 06 குழந்தைகள் உட்பட 40 பொது மக்களை மீட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
காவல் ஆய்வாளரின் இச்செயலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.