கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் To கக்கனூர் ரோட்டில் சொக்கரசனபள்ளி பிரிவு ரோட்டின் அருகில் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த இரண்டு காரை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹3,86,848/- ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது. குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நான்கு நபர்களை கைது செய்து, வாகனத்துடன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்