கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா மற்றும் குட்கா ஆகியவற்றை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் தனிப்படைகள் அமைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 17.12.2021 ஆம் தேதி தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியான தேன்கனிக்கோட்டை To ஓசூர் ரோட்டில் கோட்டை வாசல் அருகே போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ₹25,50,000/- லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 300 கிலோ கஞ்சாவை வாகனத்துடன் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிந்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கஞ்சா கடத்தி வந்த குற்றவாளியை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்த காவல் துறையினருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
இந்த நடவடிக்கை கஞ்சாவை கடத்த மற்றும் விற்க முயற்சிக்கும் அனைத்து சட்டவிரோத நபர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும் மேலும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தீவிர ஒழிப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று காவல் துறையினர் மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ளவர்களை ஒருங்கிணைந்து வாட்ஸ்அப் குரூப் அமைத்து தகவல் தர பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுபோன்று தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் கஞ்சா விற்பவர்கள் பற்றி தகவல் தந்து தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை ஒழிக்க காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்