தெலுங்கானா : ஹைதராபாத் விடுதலை நாள்’ கொண்டாட்டம் கண்டிப்பாக தொடரும், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூறினார்.தெலுங்கானாவில் இன்று நடைபெற்ற 75 வது ஹைதராபாத் விடுதலை தின விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதல்வர் திரு. ஏக்நாத் ஷிண்டே, மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. ஜி.கிஷன் ரெட்டி, மற்றும் மத்திய உள்துறைச் செயலர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டு அமித்ஷா பேசியது, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திரம் (15th August 1947 Independence across the country) கொண்டாடப்பட்ட நிலையில், ஹைதராபாத் சுதந்திரம் பெறவில்லை. 13 மாதங்கள், இந்த பகுதி நிஜாமின் அநீதிகளையும் அட்டூழியங்களையும் பொறுத்துக்கொண்டது.
சர்தார் படேல் போலீஸ் நடவடிக்கையைத் தொடங்கியபோது, தெலுங்கானா சுதந்திரமடைந்தது. கோமரம் பீம், ராம்ஜி கோண்ட், சுவாமி ராமானந்த தீர்த்தா, எம் சின்னரெட்டி, நரசிம்மராவ், ஷேக் பந்தகி, கே.வி.நரசிம்மராவ், வித்யாதர் குரு மற்றும் பண்டிட் கேசவ்ராவ் கோரட்கர், போன்ற எண்ணற்றோர் சுதந்திரத்திற்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அனபேரி பிரபாகரி ராவ், பாதம் யெல்லா ரெட்டி, ரவி நாராயண் ரெட்டி, புருகுலா ராமகிருஷ்ண ராவ், கலோஜி நாராயண ராவ், திகம்பரராவ் பிந்து, வாமன்ராவ் நாயக், ஆகியோருக்கு எங்களது பணிவான அஞ்சலியை செலுத்துகிறோம் என்றார்.