திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஸ்ரீ ரூபாராம் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இரத்தம் தரப்படும் வகையில் நடைபெற்ற முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று இரத்த வங்கிக்கு இரத்தங்களை வழங்கினர். குறிப்பாக முகாம் நடைபெறும் பகுதி வழியாக சென்ற காவியாஸ்ரீ என்ற குழந்தை இரத்தம் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து அவரது தந்தைக்கு அதனை வலியுறுத்தி இரத்ததான முகாமுக்கு அழைத்து வந்து இரத்தம் கொடுக்க வைத்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முகாமில் சிபிஆர் எனப்படும் உயிர்காக்கும் பயிற்சியினை டாக்டர் சுபத்ரா முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனை இரத்த வங்கி குழு டாக்டர் பிரதீபா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் ஸ்ரீ ரூபாராம் அறக்கட்டளை இயக்குனர் ரூபாவதி இராமகிருஷ்ணன் சான்றிதழ்கள் வழங்கினர். மருத்துவர்கள் கோவிந்தராஜ், அனுசுயா மற்றும் மீஞ்சூர் குரு சாலமன். ஆகியோர் உடனிருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு