திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ திருவிழா கடந்த மார்ச் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.14 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஏழாம் நாளான இன்று ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. ரத சாந்தியுடன் மகா அபிஷேகம் நடைபெற்று தாரை தப்பட்டை உடன் சங்குகள் முழங்க மகா தீபாரதனை காட்டப்பட்டு பொதுமக்கள் பக்தியுடன் சிவ சிவாய என மந்திரங்கள் முழங்க திருத்தேர் புறப்பட்டது. இந்த திருத்தேரினை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வி .ஆர். பகவான் , பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுணியம் பலராமன், பொன் ராஜா, பாஜக மாநில தேசிய உறுப்பினர் ஆர்.எம்.ஆர். ஜானகிராமன், முன்னாள் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணி, மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் ,மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணிமோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்சாண்டர், மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பொதுமக்களுடன் சேர்ந்து வடம் பிடித்து இழுத்தனர். தேரானது மீஞ்சூர் பகுதியில் முக்கிய மாட வீதிகளில் வலம் வந்தது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு