திருச்சி : திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் பகுதியில் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் இன்று 27.11.19-ம் தேதி 90 கண்காணிப்பு கேமராக்கள் ஈரோடு U.K அட்வர்டைசர்ஸ் நிறுவனத்தாரால் பொருத்தப்பட்டு அனைத்து கேமராக்களும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள காவல் கண்காணிப்பு அறை மூலம் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதோடு நவீன காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
இதுவரை திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 1268 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் திருவானைக்கோவில், மலைக்கோட்டை பகுதி மற்றும் வெக்காளியம்மன் கோவில் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள காவல் கண்காணிப்பு அறையை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.என்.வெல்லமண்டி நடராஜன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி.எஸ்.வளர்மதி அவர்கள் ஆகிய இருவரும் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர்.அ.அமல்ராஜ், IPS அவர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு .சு.சிவராசு, IAS அவர்கள், திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் திருமதி.N.S. நிஷா, IPS அவர்கள், திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.R.வேதரத்தினம் அவர்கள், ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் திரு.சிபி.ஆதித்யா செந்தில்குமார், IAS அவர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் திரு.பி.ஜெயராமன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி