சென்னை:சமூக விரோதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என, சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர், வாகனங்களில் போலீஸ், டாக்டர், ஊடகம், தலைமை செயலகம், டி.என்.இ.பி., உள்ளிட்ட துறையின் இலச்சினை ‘ஸ்டிக்கர்’ ஒட்டி தப்பித்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால், இது போன்ற ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனங்களை சோதனை செய்து, போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால், தங்கள் சொந்த வாகனங்களில், ‘போலீஸ்’ என ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டி, போலீசார் பலரும் பயன்படுத்தி வருவதாக, பல தரப்பினரும் புகார் தெரிவித்தனர். இது குறித்து, காவல் துறை மேல் அதிகாரியின் கவனத்திற்கு, போக்குவரத்து போலீசார் எடுத்துச் சென்றனர். இதையடுத்து, கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, பதிவெண் தகட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த 10 வாகனங்களுக்கு தலா, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நடவடிக்கை தொடரும் சட்டம் அனைவருக்கும் ஒன்று தான். பொது வெளியில் ஆய்வு நடத்தினால், பிற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவர். அதனால், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் கூறியதன்படி, கமிஷனர் அலுவலகத்தில் சோதனை செய்தோம். மொத்தம் 500 வாகனங்களில் சோதனை நடத்தியதில், 10 வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அவற்றை அகற்றி, சம்பந்தப்பட்ட வாகனத்தின் போலீசாருக்கு தலா, 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளோம். இந்த நடவடிக்கை, போலீசார் உட்பட அனைவருக்கும் தொடரும் என அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்