இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில் கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர்களுடான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மத்திய அரசின் கூட்டுறவு மற்றும் நிர்வாக இயக்குநர் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் இணைச் செயலர் திரு.பங்கஜ்குமார் பன்சால், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 131 கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர்களுடன்
மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தவுடன், மேலும் ஒவ்வொரு கூட்டுறவு
வங்கியையும் வளர்ச்சிப்படுத்தும் வகையில் புதிய திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்து பேசுகையில், ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளிலும் 10க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி பொதுவாக கூட்டுறவு வங்கிகளின் மூலம் நியாய விலை கடை நடத்துதல், பெட்ரோல் பங்கு நடத்துதல், உரம் விற்பனை செய்தல், ஈ சேவை மையம் செயல்படுத்துதல், கூட்டுறவு வங்கியின் மூலம் தனிநபர் கடனுதவிகள் வழங்குதல், நகை கடன் வழங்குதல், விவசாயிகளுக்கான கடன் திட்டம் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டங்களின் செயல்பாடுகள் அந்தந்த கூட்டுறவு சங்க வங்கிகளின் வளர்ச்சிக்கு பயனளித்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு கூட்டுறவு வங்கியும் முழுமையான வளர்ச்சி பெறுகின்ற வகையில் திட்டமிடுதல் வேண்டும். பொதுவாக நியாய விலைக்கடைகளில் 5 நாட்களுக்கு பணிகள் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருள்கள், விற்பனை செய்யலாம். கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெரிய அளவில் வணிக நிறுவன கட்டிடங்கள் கட்டி மக்களுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யலாம். அதேபோல் விவசாயிகளுக்கு தேவையான வேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்கலாம். அதேபோல் விவசாயிகளுக்கு தானிய பொருட்கள் வைப்பதற்கான கிடங்குகள் கட்டி மாதந்திர வாடகைக்கு அனுமதிக்கலாம். ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளிலும் பாதுகாப்பு பெட்டக வசதி கூடுதலாக அமைத்து வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர வாடகைக்கு அனுமதிக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 25 வகையான பணிகளை செயல்படுத்தி வங்கியின் வளர்ச்சிக்கு இந்த வருவாயை பயன்படுத்தும் பொழுது பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அவர்களின் தேவையை உள்ளுரில் இருந்து நிறைவேற்றும் பொழுது வாடிக்கையாளர்கள் மன நிறைவு பெற்று ஒவ்வொரு சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். அதேபோல் கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு அரசுதேவையான வழிகாட்டுதலை செயல்படுத்தும் என மத்திய அரசின் கூட்டுறவு மற்றும் நிர்வாக இயக்குநர் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் இணைச் செயலர் திரு.பங்கஜ்குமார் பன்சால், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள்,
உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.நாராயண சர்மா, இ.ஆ.ப., அவர்கள், கூட்டுறவு வளர்ச்சிக் கழக
முதன்மை இயக்குநர் திரு.சந்திரசேகரன் அவர்கள், கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் திரு.மனோகரன் அவர்கள், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.முத்துக்குமார் அவர்கள், பொது மேலாளர் திரு.கருணாகரன் அவர்கள், சரக துணைப்பதிவாளர் திரு.சுப்பையா அவர்கள் மற்றும் உதவி பொது மேலாளர்கள், சரக மேலாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி