நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள வேளாங்கண்ணி பேராலய விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு.பிரவீன்.பி நாயர் இஆப அவர்கள் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும் ஆன்மிகச் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது உலக பிரசித்திபெற்ற வேளாங்கண்ணி பேராலயம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் செப்டம்பர் 8 தேதி வேளாங்கண்ணி பேராலயத்தில் அன்னையின் பிறந்த நாள் 10 நாட்களுக்கு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த ஆண்டு கொடி ஏற்றம் வழக்கம் போல் வரும் 29ம் தேதி தொடங்க உள்ளது இந்த நிலையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் வேளாங்கண்ணி பேராலய விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது இந்த நிலையில் வேளாங்கண்ணி பேராலய விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப ஆகியோர் தெரிவித்துள்ளனர்