விழுப்புரம் : கடந்த (3/05/2022) முதல் (8/05/2022),வரை ஆரோவில் பகுதியை சேர்ந்த பெண் அஞ்சு D/O தேவசியா என்பவர் Work From Home இணையத்தில், வேலை தேடுதல் தொடர்பாக தேடியதில் என்ற லிங்கை உபயோகித்து வேலை தேடியதாகவும், இதன் மூலம் அவருக்கு வந்த அழைப்புகளில் இருந்து வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இணையதளங்கள் வழங்கப்பட்டதாகும். இதனால் இவர் முன்பணமாக சிறிது சிறிதாக ரூபாய் 2 லட்சத்து 415 ரூபாய் Google pay மூலம் சம்பந்தப்பட்ட லிங்க்ல் இருந்து அனுப்பப்பட்ட அக்கவுண்டுகளுக்கு அனுப்பியதாகவும். ஆனால் இவர் வேலை செய்தும் சம்பளம் மற்றும் இவர் கட்டிய முன்பணம் திருப்பி தராததால் புகார் அளித்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோவிந்தராஜ், அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.ரவிசங்கர், மற்றும் காவலர்கள் தலைமையில் சம்பந்தப்பட்ட இணையத்தில் விசாரணை செய்தும் புகார் பணம் அனுப்பிய அக்கவுண்டுகளை முடக்கம் செய்து அதில் இருந்து புகார்தாரர் அனுப்பிய இரண்டு லட்சத்து பணம் மீண்டும் புகார்தாரர் வங்கி கணக்கிலேயே திருப்பி செலுத்தப்பட்டது. அதற்கான காசோலையினை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அஞ்சுவுக்கு நேரில் வழங்கினார்.