கோவை: கோவை போத்தனூர் பக்கமுள்ள கணேசபுரம் விட்டல் நகர் பள்ளிக்கூடம் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் திரு.தேவேந்திரன் சப்-இன்ஸ்பெக்டர் திரு.சுந்தர்ராஜ் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் நேற்று அங்டு அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட மது பாட்டில்களையும், தடை செய்யப்பட்ட குட்கா வையும் காரில் வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விட்டல் நகர் ராஜ்குமார் (வய39) குறிச்சி பிரதீஸ் (வயது 38) மணிகண்டன் (வயது 51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கார் , 114 மதுபாட்டில்கள் , 10,800 பாக்கெட் குட்கா ,பணம் ரூ 25ஆயிரத்து 800 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கால் வேலை கிடைக்காததால் இந்த தொழிலில் ஈடுபட்டதாக அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது .