வேலூர் : வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை (CCTV CONTROL ROOM) வேலூர் சரக காவல் துணை தலைவர் திருமதி.காமினி இ.கா.ப அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் நகரின் முக்கிய பகுதிகளில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் 270 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிசிடிவி கண்காணிப்பு அறையில் 24×7 என்ற சுழற்சி மூலம் கண்காணிக்கப்படும். இதன் மூலம் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்படுவதுடன் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க உதவும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். உடன் வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) திரு.மதிவாணன் அவர்கள், வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ. கா.பா அவர்கள், மற்றும் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்