வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு ரைடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நேற்று (14.10.2019) அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு கே.மனோகரன் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி காவேரிப்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு. லட்சுமிபதி அவர்கள் மற்றும் போலீஸ் பார்ட்டி சகிதம் காவேரிப்பாக்கம் அடுத்த ஈராளாச்சேரி முட்புதர் மற்றும் மதகு அருகில் ரைடு செய்தபோது மேற்கண்ட இடங்களில் சேர்த்து 10 பேரல்களில் தலா 200 லிட்டர் வீதம் மொத்தம் 2000 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு உபயோகப்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செயல் யார் செய்தார்கள் என்று அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் காவேரிப்பாக்கம் காவல் ஆய்வாளர் அவர்கள் இரகசிய விசாரணை செய்து வருகிறார்கள்.
மேலும் இதே போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாயும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்