சாராயம் கடத்திய மூவர் கைது
வேலூர் மாவட்டம் ALGSC காவல் துணை கண்காணிப்பாளர் திரு. V.S.G. சுரேஷ் அவர்கள் தலைமையில், வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி ஆகியோர் தனிப்படையினர் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 1.அருள் , 2. ஜெயக்குமார் 3. விஜயகுமார் ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 85 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு ,கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சாராய ஊரலை அழித்த காவல்துறையினர்
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப..,அவர்களின் உத்திரவின் படி வேலூர் பொன்னை காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுரேஷ்பாபு அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் மேல்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி மலை அடிவாரத்தில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பொருட்களை கைப்பற்றி அழித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்