வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் ஐ.பி.எஸ் அவர்கள் நேற்று காலை மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு உதவி ஆய்வாளர் கான ஜனவரி 20 22 மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
இதில் வேலூர் மாவட்டத்தில் குற்ற நிகழ்வுகளை குறைக்கவும் நிலுவையிலுள்ள கொலை பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் புலனாய்வு விரைந்து முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் வெகு காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி முடிக்கவும் அதிகமாக குற்றம் நடக்கும் பகுதிகளை அடையாளம் கண்டு கூடுதலாக ரோந்து மேற்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சுமுகமாக நடத்த மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்து தேர்தலின் போது பிரச்சனை செய்யக்கூடிய ரவுடிகள் மற்றும் வீண் சண்டை செய்யும் நபர்களை பட்டியலிட்டு அவர்கள் தேர்தலின்போது பிரச்சினை ஏதும் ஏற்படா வண்ணம் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதில் எந்தவித தயக்கமும் காட்டக்கூடாது என்று உத்தரவிட்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்