வேலூர்: (12.01.23) ம் தேதி மாலை 04.00 மணி அளவில் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக சரக டி.ஐ.ஜி திரு. முத்துசாமி இ.கா.ப மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜேஷ் கண்ணன் இ.கா.ப அவர்களின் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக பிரமாண்டமான முறையில், கொண்டாடப்பட இருக்கிறது. மேலும் குழந்தைகள் விளையாடும் வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் உண்டு மகிழும் வகையில் பல வகையான FOOD STALL மற்றும் மட்பாண்டங்களில் செய்யப்பட்டுள்ள கைவினைப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் காவலர்களின் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வருமாறு வருக,வருக என வரவேற்கிறோம். மேலும் இந்த சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பிக்க காவல் துறையினரின் குடும்பங்களை அன்புடன் அழைக்கின்றோம். விழாவை சிறப்பிக்க வருகை தருமாறு அனைவரையும் வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்