வேலூர்: மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (10.12.2021) வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில் வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் இந்தியாவில் செயல்படுத்ததக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்று உறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம் சொல் அல்லது செயல் மூலம் பிறருடைய மனித உரிமைகளை மீறி எந்த ஒரு செயலையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்யமாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். என்று அனைவரும் ஒன்றிணைந்து மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
உடன் காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர்கள் உறுதிமொழியை ஏற்றனர்.