வேலுார்: வேலுார் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள மதுவிலக்கு வழக்குகளின் சொத்தான வாகனங்கள், நீதிமன்றத்தில் முடிவுற்ற வழக்குகளின் சொத்தான வாகனங்கள் மற்றும் 102 CrPC (Unclaimed Vehicles) வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள யாரும் உரிமை கோரப்படாத வாகனங்களை முறையாக அரசு இதழில் (02/2019) விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது.
அப்படி விளம்பரம் செய்திருந்தும், மேற்படி வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரி முன்வரவில்லை. அரசு இதழில் விளம்பரம் செய்யபப்பட்டு, குறிப்பிட்ட காலகெடு முடிந்து விட்டப்படியால் மேற்குறிப்பிட்ட அனைத்து வழக்குகளின் சொத்தான வாகனங்களை அரசுக்கு ஆதாயம் செய்ய பொது ஏலம் மூலம் 29-09-2021 தேதி காலை 10.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் (Nethaji Stadium) மைதானத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
எனவே பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் Lorry-3, Four wheelers -20, Auto-7, Two Wheelers- 486 and Cycle-13 ஆக மொத்தம் 529 வாகனங்களை பார்வையிட்டு, பொது ஏலம் மூலம் வாகனங்களை விலைக்கு வாங்குபவர்கள் நுழைவு கட்டணம் ரூ.100/- செலுத்த வேண்டும். விலை மதிப்பீட்டிற்கு 18 % சதவீதம் (GST) விற்பனை வரி செலுத்தி வாகனங்களை அன்றே வாகன ஏலத்தொகை மற்றும் விற்பனை வரி செலுத்த வேண்டும்,
மேலும் மூன்று தினங்களில் வாகனங்களை மைதானத்திலிருந்து பெற்று செல்ல வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
காவல் கண்காணிப்பாளர், வேலூர் மாவட்டம், வேலூர்.