வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் அவர்களின் உத்தரவின்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் பொது மக்கள் அனைவருக்கும் இலவசமாக மாவட்ட காவல் துறை சார்பாக முகக் கவசங்கள் (Mask) வழங்கப்பட்டது. மேலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிதல் அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்