வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு முகக்கவசங்கள்(Mask)மற்றும் சனிடைசர்கள்(Sanitizers) வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டது.
வேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள், மற்றும் வடக்கு காவல் ஆய்வாளர் திரு. நாகராஜன் ஆகியோர் வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளுக்கு, உணவு மற்றும் அரிசி 25kg, ஆகியவற்றை வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு பேனர்
பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் கிராமிய காவல் நிலையம் சார்பில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை உள்ள சாலைகளில் விழிப்புணர்வு பேனர்(BANNER) வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரணாம்பட்டு
தமிழ்நாடு காவல் துறை சார்பாக பேரணாம்பட்டு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு குமார் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் அவர்கள் தலைமையில் பேரணாம்பட்டு திருநங்கைகளுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்