வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மது, சாராயம் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு திரு.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், சட்டம்-ஒழுங்கு போலீசார் . மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வாகன தணிக்கை மற்றும் சோதனையில் மது, சாராயம் விற்றதாக 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 81 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 797 மதுபாட்டில்கள், 525 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.