வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பொது முடக்கம் காரணமாக பொது மக்கள் அளித்துள்ள புகார் மனுக்கள் மீது நீண்ட நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் இருப்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் பேரில் நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரிக்க வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான சிறப்புக் குழுவினர் (08.06.2020) வேலூர் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், வடக்கு, மற்றும் தெற்கு குற்றப்பிரிவு காவல் நிலையம், வேலூர் மகளிர் காவல் நிலையம், மற்றும் சத்துவாச்சாரி காவல் நிலையம், ஆகிய காவல் நிலையத்தில் நிலுவையிலுள்ள மனுக்களை சங்கமம் கல்யாண மண்டபத்திலும் மற்றும் வேலூர் கிராமிய காவல் நிலையம், அரியூர் ,பாகாயம் மற்றும் விரிஞ்சிபுரம் ஆகிய காவல் நிலையத்திலுள்ள மனுக்களை பென்னாத்தூர் A.S மஹால் மண்டபத்திலும் மற்றும் பள்ளிகொண்டா, அணைக்கட்டு, வேப்பங்குப்பம், மற்றும் ஆகிய காவல் நிலையத்தில் நிலுவையிலுள்ள மனுக்களை ஸ்ரீனிவாசா திருமண மண்டபத்தில் மனுதாரர்களை வரவழைத்து இன்று ஒரே நாளில் மட்டும் 115 புகார் மனுக்களை விசாரித்து தீர்வு காணப்பட்டது. மேலும் இது போன்ற உடனடி விசாரணை மூலம் பொதுமக்கள் அளித்திடும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்