வேலூர்: காவலர்களின் சிறப்பு செய்திகள் குறித்து காவல் செய்தி மடல் ( மாதம்/காலாண்டு) சென்னை, ஆவடி, தாம்பரம் போன்ற பெருநகர காவல் ஆணையரங்களில் மட்டும் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களின்
நற்செயல்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டத்தில் முதல்முறையாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முயற்சியினால் கடந்த ஆண்டு அக்டோபர்-22 முதல் டிசம்பர்-22 வரை (4 quarter) காவலர்களின் சிறப்புகள் குறித்து காவல் செய்தி மடல்-1 தயாரிக்கப்பட்டு.
நேற்று 13.01.2023-ம் தேதி சமத்துவ பொங்கல் விழாவின்போது வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் திரு.M.S முத்துசாமி இ.கா.ப., அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது