வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பிள்ளையார்குப்பம் தொடங்கி மாதனூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சத்துவாச்சாரி,விரிஞ்சிபுரம், பள்ளிகொண்டா காவல் நிலையங்கள் பிரதானமாக அமைந்துள்ளன.
இதில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கைகள் அப்துல்லாபுரம் விமான நிலைய சாலை சந்திப்பு மற்றும் சத்துவாச்சாரி ஆர்டிஓ அலுவலகம் சாலை சந்திப்புகளில் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சத்துவாச்சாரி, விரிஞ்சிபுரம், பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரும்புகை, வள்ளலார், மோட்டூர் மற்றும் கந்தனேரி ஆகிய இடங்களில் காவல் உதவி மையங்களை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .செல்வகுமார் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த காவல் உதவி மையங்கள் 24 மணி நேரமும் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவற்றுடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சிறப்பு இரவு ரோந்து அதிகாரி கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் அதேபோல் பள்ளிகொண்டா டோல் பிளாசாவில் ஒரு அதிகாரியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இது தவிர தேசிய நெடுஞ்சாலையில் 3 ரோந்து வாகனங்களில் 24 மணி நேரமும் போலீசார் சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
என்று வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் அப்பகுதி மக்களிடம் வழங்கப்பட்டு வருகிறது.
என்றும் மக்கள் நலனில் வேலூர் மாவட்ட காவல்துறை