வேலூர் : தமிழக அரசால் வேலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள கொரானா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி திரு.ராஜேஷ் லக்கானி இ.ஆ.ப., அவர்கள் இன்று(23.06.2020) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சண்முகசுந்தரம் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு சென்னை மற்றும் பிற மாவட்டத்திலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு வருபவர்களை வேலூர் மாவட்ட காவல்துறையினர் சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை செய்து வருகின்றனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை அடுத்த பிள்ளையார்குப்பம் சோதனைச்சாவடியில் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு வருபவர்களை கண்காணிக்கும் பொருட்டு வேலூர் வடக்கு காவல் நிலையம் சார்பாக வேலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் காவல் இசைக் குழுவினர்களின் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றியும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், சென்னை மற்றும் பிற மாவட்டத்தில் இருந்து வேலூர் வருபவர்களை பற்றி தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்