வேலூர்: வேலூர் சரகத்தில் புதிய டி.ஐ.ஜி.யாக திரு.ஏ.ஜி பாபு இன்று வேலூரில் பொறுப்பேற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வேலூர் சரகத்தில் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதே தன்னுடைய முதல் நடவடிக்கையை என தெரிவித்தார்.
மேலும் தற்கொலை, கொலை, சாலை விபத்து, கொரான உயிரிழப்பு,உள்ளிட்ட எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாதவாறு அதை தடுக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,
காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்த வேண்டும்,காவல்துறையினர் மக்களுக்கான பணியாளர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படும்.
மேலும் மணல் திருட்டு, காட்டன் சூதாட்டம், கள்ளச்சாராயம், திருட்டு சம்பவங்கள்என அனைத்து விதமான குற்ற சம்பவங்களை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு தன்னுடைய செயல்பாடு இருக்கும் என இருக்கும் என அவர் கூறினார்.முன்னதாக அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்