இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட வாக்களிக்கும் மையமான ஜி. வரதராஜுலு செட்டியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் வாக்கு எண்ணும் மையமான அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாலாஜா (AAA College) ஆகியவற்றை வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் . திருமதி.ஆனி விஜயா, இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. திருமதி.தீபா சத்யன், இ.கா.ப., அவர்கள் மற்றும் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு அவர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் உடன் இருந்தார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்