வேலூர்: வேலூர் மாவட்ட குடியாத்தம் உட்கோட்டம், கே.வி.குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கே.வி.குப்பம் கிராமம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (33) S/O கோவிந்தராஜ் என்பவரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சண்முகசுந்தரம் இ. ஆ.ப., அவர்கள் தடுப்பு காவலில் (BOOTLEGGER ACT)அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
போலி காவல்துறை அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்தவர் கைது
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி போலி நிருபர், போலி வழக்கறிஞர், போலி காவல்துறை அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்து பல இடங்களில் ஏமாற்றி பலரிடம் பணம் பறித்த வாலாஜாபேட்டை அடுத்த பூண்டியை சேர்ந்த பூண்டி ஜெகன் என்பவரை வேலூர் மாவட்ட வேலூர் வடக்கு காவல் துறையினரால் இன்று(24.05.2020) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
கஞ்சா குடிக்கிகள் கைது
கிருபாகரன் என்பவரை இரு கஞ்சா குடிக்கிகள் அடித்து பணம் பறிக்க முயன்றார்கள் அவர் சத்தமிட்டுக் கூச்சலிட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் அந்த இரண்டு நபர்களையும் பிடித்து விருதம்பட்டு போலீசாரிடத்தில் ஒப்படைத்தார்கள். அந்த இரண்டு நபர்களையும் விசாரித்த போலீசார் அவர்கள் ஏற்கனவே கஞ்சா, கள்ளச்சாராயம், வழிப்பறி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது மேலும் கைது செய்யப்பட்ட கார்த்தி (24) மற்றும் சூர்யா (22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடரும் சாராய வேட்டை
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப,அவர்களின் உத்திரவின் படி வேலூர் மாவட்டம் மதுவிலக்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள், வேலூர் மதுவிலக்கு காவல் பிரிவு உதவி ஆய்வாளர் திரு.கார்த்தி, வேப்பங்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பிரகாசம் ஆகியோர் தலைமையிலான மதுவிலக்கு தனிப்படையினர் வேலூர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிச்சமந்தை மலைப்பகுதியில் உள்ள குண்டுறனி கிராமதில் இன்று(23.05.2020) நடத்திய மதுவிலக்கு வேட்டையில் சுமார் 800 லிட்டர் சாராய ஊரல் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்