வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. டி.ஆ. மாமல்லவனன், ஐ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், வேலாங்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. முத்துச்செல்வன் அவர்களின் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆட்டோ ஓட்டுநர்கள் மூலம் பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஆட்டோக்களில் விதிமுறைகளை பின்பற்றாமல் பயணிப்பதை கட்டுப்படுத்துதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பது, சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன், சாலை விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய உரிமம் பெற்ற பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
















