வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் பள்ளிகொண்டா காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி மனோன்மணி அவர்களின் தலைமையிலான காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது.
அவ்வழியாக சந்தேகத்தின் பேரில் காரில் மற்றும் கண்டனர் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்த போது சுமார் நான்கு கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இதன் மதிப்பு சுமார் 35 லட்சம் ஆகும் மேலும் கடத்தலில் ஈடுபட்ட 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் மூன்று நபர்கள் ஆன கோபால் வயது 30 ராஜா குருவி வயது 25 மற்றும் குமார் 30 ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மீதமுள்ள குற்றவாளிகளான தர்மன் ஞானராஜ் மற்றும் சசிகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் கண்டெய்னர் வாகனங்களை பறிமுதல் செய்தனர்
காவலர்களின் சிறப்பான செயலை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செல்வகுமார் அவர்கள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரடியாக அவர்களை வரவழைத்து வெகுவாகப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்