வேலூர் : கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள காவல் துறை தலைவர் திருமதி . வனிதா இ. கா. ப அவர்கள் , வேலூர் காவல் துணை தலைவர் திருமதி. காமினி, இ. கா. ப, மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ. கா. ப ஆகியோர் வேலூர் மாவட்ட CMC மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வடமாநிலத்தைச் சார்ந்தவர்களையும் மற்றும் VIT கல்லூரி கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். பின்பு கொரோனா தடுப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
வேலூர் மாவட்டம் நிரவி மருத்துவமனை கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள காவல் துறை தலைவர் திருமதி . வனிதா இ. கா. ப அவர்கள் , வேலூர் காவல் துணை தலைவர் திருமதி. காமினி, இ. கா. ப, மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ. கா. ப ஆகியோர் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் சிறந்த முறையில் செய்து கொடுத்தும் கொரோனா தடுப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்