வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார், IPS அவர்களின் உத்தரவின் பேரில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, 06ஃ10ஃ2019 அன்று வேலூர் மாவட்டம் முழுவதும் வேலூர், காட்பாடி, லத்தேரி, பணமடங்கி, திருவலம், ராணிப்பேட்டை, புதுப்பாடி, வாலாஜா, வாழைப்பந்தல், பொன்னை, ராணிப்பேட்டை, பானாவரம், தக்கோலம், கே.வி.குப்பம், மேல்பட்டி, குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், அணைக்கட்டு, வேப்பங்குப்பம், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய இடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பரதராமி, திருப்பத்தூர் டவுன், கே.வி.குப்பம், பானாவரம், உமராபாத், காட்பாடி, விருதம்பட்டு, வேலூர் கிராமியம், லத்தேரி ஆகிய காவல் நிலைய காவல்துறையினர் தலைகவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், சீட்பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் மற்றும் பேனா வழங்கி பாராட்டினார்கள். குடியாத்தம் டவுன் காவல் நிலைய காவலர்கள் தலைகவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
மேலும், இந்த வாகன தணிக்கையில் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது 2302 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது 365 வழக்குகளும், இதர வழக்குகள் 67 ஆக மொத்தம் 2667 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்