வேலூர் : வேலூர் விருபாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி, சங்கர் (45), இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். சங்கருக்கு (15), வயதில் ஒரு மகனும், (13), வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், சங்கரின் மகள் வயிற்று வலியால் துடித்ததால், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். அங்கு அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் மருத்துவமனையில் இருந்து, வேலூர் சமூகநலத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வேலூர் சமூக நலத்துறையினர் விசாரணை செய்ததில் திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்தப் பெண்ணின் குழந்தைக்கு அவரின் தந்தை சங்கர் தான் காரணம் என தெரியவந்தது. இதனால் வேலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சங்கர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்