திருவாரூர் : பேரளம் வாய்காங்கரை தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Ashok Leyland Dost (Load Van)-வாகனத்தை திருடி சென்றதாக பேரளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் உத்தரவின் படி பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை தேடி வந்தனர். தனிப்படை காவலர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை செய்ததில் பேரளம் வாய்காங்கரை தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Ashok Leyland Dost (Load Van)- திருடி சென்றது நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கண்டுபிடித்தனர்.
அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு சென்ற தனிப்படையினர் திருட்டு வழக்கில் தொடர்புடைய நீலகிரி மாவட்டம், கூடலூர், அத்திப்பாளி, விமலகிரி பகுதியை சேர்ந்த பென்னி மகன் பிஜின் பெ ஜேக்கப் (வயது-32). 2.நடுகூடலூர் பகுதியை சேர்ந்த முகமது சித்திக் மகன் முகமது ரிஸ்வான் (வயது-4௦). 3.கோக்கால் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் நாகேஸ்வரன் (வயது-4௦). ஆகிய மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேற்படி நபர்கள் திருடி சென்ற Ashok Leyland Dost (Load Van) பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு திருட்டு வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்த பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.மணிமாறன், உதவி ஆய்வாளர் திரு.சரவணபவகுமார் மற்றும் முதல் நிலை காவலர்-399 திரு.ரவீந்தர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திருட்டு, வழிப்பறி, அடிதடி, மிரட்டுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.