நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவின் சூதாட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேதாரண்யம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சபியுல்லா அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் மற்றும் மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் பகுதியில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கும்பலை மடக்கிப் பிடித்தனர். அதில் செம்போடையை சேர்ந்த அன்பழகன் (42) புஷ்ப வனத்தை சேர்ந்த பாரதிதாசன்(40) விழுந்தமாவடியைச் சேர்ந்த சரவணன்(40) காமேஸ்வரை சேர்ந்த ராஜராஜசோழன்(36) ஆகிய 4 பேரை சூதாடிய குற்றத்திற்காக கைது செய்தனர் மேலும் 2 நபர் தப்பி ஓடிவிட்டனர். இதில் அவர்கள் பயன்படுத்திய ஒரு கார், 2 பைக், ரூ.7,150/-பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்ற சூதாட்ட செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறினார்கள்.