திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் புதையல் எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறி நிர்வாண பூஜை நடத்தி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 22 லட்சம் ரொக்க பணம் மற்றும் 45 சவரன் தங்க நகைகளை ஏமாற்றிய திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிடர் சசிகுமார்(51) என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் திரு.ஆறுமுகம், ஆய்வாளர் திருமதி.பானுமதி, சார்பு ஆய்வாளர் திரு.சேகர் பவுல்ராஜ் சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.