தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் ஜெயமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வராக நதி ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற மூன்று நபர்கள் ஆற்று வெள்ளத்தில் திடீரென சிக்கிய நிலையில் அவர்களின் குரல் கேட்டு அருகில் இருந்த மேல்மங்கலம் ஊரைச் சேர்ந்த திரு.மு.ரவிக்குமார் என்பவர் சற்றும் தாமதிக்காமல் ஆற்று வெள்ளத்தில் குதித்து தன் உயிரை பொருட்படுத்தாமல் வெள்ளத்தில் சிக்கிய மூன்று நபர்களையும் மீட்டார்.
மேலும் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 3 நபர்களின் உயிரை காப்பாற்றிய திரு.மு.ரவிக்குமார் அவர்களின் வீர தீர செயலை கெளரவிக்கும் விதமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் அவரை நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.