விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக, இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், வட்டாட்சியர் இராமச்சந்திரன் மற்றும் வருவாய் அலுவலர்கள் வாகன சோதனை ஈடுபட்ட பொழுது, இராஜபாளையம் பகுதியில் இருந்து திருச்சி ,செய்யாறு போன்ற பகுதிகளுக்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிகள் ,மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் என மொத்தம் 6 லாரிகளை வட்டாட்சியர் ராமச்சந்திரன் மடக்கிப்பிடித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் புரோக்கர் அருணாச்சலம். ராதாகிருஷ்ணன், டிரைவர் அப்பாதுரை, ரவி,வரதன், ஜெகநாதன், தனபால் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உரிய ஆவணங்கள் இன்றி கடத்திவரப்பட்ட மணல்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்