திருப்பூர் : வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னும் கூற்றுக்கு ஏற்ப, கொரானா வைரஸ் தொற்று பரவலால்,உலகமே முடங்கி கிடக்கும் இவ்வேளையில், பிழைப்பிற்காக நம் தமிழ் நாட்டிக்கு தஞ்சம் பிழைக்க வந்த பிற மாநிலத்தவர்களை பசியால் நோகடிக்க கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் நம் தமிழக காவல் துறையினர், பாதுகாப்பு பணியுடன், ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் நற்செயலில் ஈடுபட்டு உள்ளனர்.
அதன் படி, திருப்பூர் மாநகர திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைப்புதூர் பகுதியில் ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 21 குடும்பங்களுக்கு தலா 10 KG அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் திருமுருகன் பூண்டி காவல் ஆய்வாளர் திருமதி.முனியம்மாள் மற்றும் ரோந்து காவலர் 296 விஜயகுமார் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்த செயலை செய்த ஆய்வாளர் மற்றும் காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.சஞ்சய் குமார், IPS மற்றும் துணை ஆணையர்கள் திரு.பத்ரிநாராயணன், IPS, பிரபாகரன், IPS ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.