நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கு.ஜவகர்.இகாப ., அவர்களின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேற்படி தனிப் படையினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் (11.04.2023) அன்று நரிமணம் வெட்டாறு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வெளி மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 100ml கொண்ட பாண்டி விஷ சாராயம் 1000 பாக்கெட்டுகள், மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 இரு சக்கர வாகனமும்,மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் இதுபோன்ற மதுக்கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.