வேலூர் : (21.9.2022), வேலூர் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகில் தொழில்நுட்ப ஆய்வாளர் திரு. செந்தில்குமார், மற்றும் உதவி ஆய்வாளர் திரு. ஜாகிர் உசேன், அவர்கள் CCTV camera சம்பந்தமாக அலுவல் பணியில் இருந்த போது, புதிய பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக எந்த பேருந்திலும் ஏறாமல் உட்கார்ந்து இருந்த சிறுமிகளை பார்த்து காவல் அதிகாரிகள் நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டதற்கு நாங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் உள்ள வீட்டை விட்டு வெளியே வந்து விட்டோம், எங்கே போவது என்று தெரியவில்லை என்று சொல்லவே இரண்டு சிறுமிகளை மீட்டு மாவட்ட சமூக நல கண்காணிப்பாளர் திருமதி. துர்கா தேவி, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நற்செயலை செய்த காவல் அதிகாரிகளை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .S. ராஜேஷ் கண்ணன்இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்